விமானத்தைத் தாக்கும் மின்னல் : அதிர்ச்சியூட்டும் வீடியோ !

  0
  6
  Lightening

  மின்னல் விமானத்தைத் தாக்கும் அந்த வீடியோவை டேனியல் க்யூரி என்னும் விமானி விமான நிலையத்தில் இருந்து தனது செல்போன் மூலம் பதிவு செய்துள்ளார்.

  நியூஸிலாந்தின் கேண்டர்பரி பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், க்றிஸ்ட் சர்ச் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான A380 ஏர்பஸ் விமானம் நேற்று தரையிறங்கிய போது மின்னல் அந்த விமானத்தை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

  emirates

  மின்னல் விமானத்தைத் தாக்கும் அந்த வீடியோவை டேனியல் க்யூரி என்னும் விமானி விமான நிலையத்தில் இருந்து தனது செல்போன் மூலம் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, “The view out our window onto the tarmac today! The Emirates plane waiting for the storm to pass ” என்று பதிவிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோவை எடுக்கும் போது சுமார் 3:30 மணி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

  ligheteninh

  இந்த மின்னல் தாக்குதல் குறித்துப் பேசிய மற்றொரு விமானி பில்லி ஹேம்மெட், ‘ விமானம் தரை இறங்கிய உடனேயே பயணிகளைக் கீழே இறக்க முயற்சி செய்தோம். ஆனால், மோசமான வானிலை நிலவியதால் பயணிகளைக் கீழே இறக்கவில்லை. இந்த மின்னல் தாக்குதலில் எந்த தீ விபத்தும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.  

   

  மோசமான வானிலையின் காரணமாக க்றிஸ்ட்சர்ச் விமான நிலையம் அமைந்துள்ள பகுதியை 6 மணிநேரத்திற்குள் 1500க்கும் மேற்பட்ட மின்னல்கள் தாக்கியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.