விமானத்தில் பயணியின் இருக்கையில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

  0
  2
  fire

  அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து லண்டன் சென்று கொண்டிருந்த போது விமானம் ஒன்று பறந்துக்கொண்டிருக்கும்போது தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

  அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து லண்டன் சென்று கொண்டிருந்த போது விமானம் ஒன்று பறந்துக்கொண்டிருக்கும்போது தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

  விர்ஜின் அட்லான்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது பயணியின் இருக்கையில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து விமானம் அவசரமாகத்  போஸ்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் செல்போனின் பேட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது தீயை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் விமானத்துறை அதிகாரிகள் கூறினர். உடனடியாக தீ அணைக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த  சம்பவத்திற்காக விர்ஜின் அட்லான்டிக் நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. அவர்களுக்கு மாற்றுப் பயணமும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.