விபரீதத்தில் முடிந்த யூனிஃபார்ம் பிரச்னை! – கம்பி எண்ணும் தலைமையாசிரியை

  0
  5
  மாதிரி படம்

  பஞ்சாப்பில் யூனிஃபார்ம் அணியாமல் வந்த மாணவனை கட்டி வைத்து அடித்ததால் மாணவர் தற்கொலை செய்துகொண்டார். மாணவனை அடித்த தலைமை ஆசிரியை மற்றும் அவரது கணவர் தற்போது கம்பி எண்ணுகின்றனர்.
  பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார் தனஞ்செய் திவாரி.

  பஞ்சாப்பில் யூனிஃபார்ம் அணியாமல் வந்த மாணவனை கட்டி வைத்து அடித்ததால் மாணவர் தற்கொலை செய்துகொண்டார். மாணவனை அடித்த தலைமை ஆசிரியை மற்றும் அவரது கணவர் தற்போது கம்பி எண்ணுகின்றனர்.
  பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார் தனஞ்செய் திவாரி. படிப்பில் எப்போதும் இவர் முன்னிலைதான். பத்தாம் வகுப்பில் 93 சதவிகித மதிப்பெண் பெற்றுள்ளார். சம்பவத்தன்று பள்ளிக்கு சீருடை அணியாமல் கலர் டிரெஸ்ஸில் வந்துள்ளார். 

  student

  என்ன ஏது என்று விசாரிக்காமல், யூனிஃபார்ம் ஏன் அணியவில்லை என்று கூறி பள்ளி தலைமையாசிரியையும் அவரது கணவரும் மற்ற மாணவர்கள் முன்னிலையில் தனஞ்செய் திவாரியை கைகளைக் கட்டிப்போட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால், மனமுடைந்த தனஞ்செய் திவாரி வீட்டுக்கு வந்ததும் யாரிடமும் எதுவும் கூறாமல் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
  அதன்பிறகுதான் பள்ளியில் நடந்த விஷயம் பெற்றோருக்கு தெரியவந்தது. இது குறித்து தனஞ்செய் திவாரியின் தந்தை லூதியானா போலீசில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசார், மாணவனை அனைவர் முன்னிலையிலும் கட்டிவைத்து தாக்கிய தலைமை ஆசிரியை சரோஜ் ஷரம் மற்றும் அவரது கணவர் பிரபுதத் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  teacher

  மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பஞ்சாப் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களை அடிப்பதே தவறு அதிலும் நன்கு வளர்ந்த மாணவனை மற்ற மாணவர்கள் முன்னிலையில் கையைக் கட்டிப்போட்டு அடித்து அசிங்கப்படுத்தியது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.