விநாயகர் மயில்வாகனன் ஆன கதை தெரியுமா?

  0
  8
  விநாயகர்

  அழகின் சிகரமான முருகனைத் தானே நாம் எல்லோரும் மயில்வாகனன் என்று போற்றி பாடுகிறோம். ஆனால், அண்ணன் பிள்ளையாரையும் மயில்வாகனன் என்றும் மயூரேசர் என்றும் போற்றிப் பாடுகின்றனர். ஆம், ஆனை முகத்தானுக்கும் இந்த திருநாமங்கள் உண்டு. ஆனை முகத்தான் மயில்வாகனன் ஆன கதையைப் பார்க்கலாமா? 

  அழகின் சிகரமான முருகனைத் தானே நாம் எல்லோரும் மயில்வாகனன் என்று போற்றி பாடுகிறோம். ஆனால், அண்ணன் பிள்ளையாரையும் மயில்வாகனன் என்றும் மயூரேசர் என்றும் போற்றிப் பாடுகின்றனர். ஆம், ஆனை முகத்தானுக்கும் இந்த திருநாமங்கள் உண்டு. ஆனை முகத்தான் மயில்வாகனன் ஆன கதையைப் பார்க்கலாமா? 

  vinayagar

  கண்டகி நகரை சக்ரபாணி எனும் மன்னன் ஆட்சி புரிந்து வந்த காலம் அது. மன்னன் சக்ரபாணிக்கும், அவனது மனைவியான உக்ராவிற்கும் குழந்தைகள் இல்லாத குறையைத் தவிர, வேறு எந்தக் குறையும் இல்லை!  குழந்தை இல்லாத குறை, பிற எல்லா வளங்களையும் மறக்கச் செய்து, மன்னனை வாடச் செய்தது. சௌனக் எனும் முனிவரிடம் சென்று தம்பதிகள் இருவரும் ஆலோசனை கேட்க, செளனக் முனிவர், சூரியனைக் குறித்துத் தவம் இருக்கச் சொன்னார். 
  இருவரும் சூரியனைக் குறித்து தவம் இருந்து வந்ததற்கு பலன் கிடைத்தது. சூரிய பகவானின் அனுக்கிரகத்தால், உக்ராவும் கர்ப்பம் அடைந்தாள். ஆனால்… நாளாக ஆக அரசி உக்ராவின் வயிற்றினுள் குழந்தையின் சூடு அதிகரித்துக் கொண்டே வந்தது. அவளால் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் சூட்டைத் தாங்க முடியாமல் தவித்துப் போனாள். கதறினாள். கண்ணீர் விட்டாள். ஒரு கட்டத்தில், உக்ரா சூடு தாங்க முடியாமல் கடலில் இறங்கிக் கொண்டாள். அவளது தவிப்பைக் கண்டு வருந்திய சமுத்திர ராஜனும், அவள் குழந்தையைத் தான் தாங்கி வெளியே கொண்டு வந்து அவளிடம் ஒப்படைத்தான். சமுத்திர ராஜனால் குழந்தை வெளியே உலகுக்கு வந்ததால், உக்ராவும், சக்ரபாணியும் குழந்தைக்கு ‘சிந்து’ என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்! 

  vinayagar

  அசுரர்களின் குருவான சுக்ராச்சார்யாரிடம் சூரிய பகவானைக் குறித்த மந்திரங்களைக் கற்றான் சிந்து. சுக்ராச்சார்யரும் சூரியனைக் குறித்துத் தவம் செய்யச் சொல்லிக் கொடுக்க, சிந்துவும் அப்படியே தவமிருந்து வந்தான்!  சிந்துவின் தவத்தில் மகிழ்ந்த சூரிய பகவான், அவனுக்குப் பரிசாக அமுதக் கலசத்தைக் கொடுத்து, அதை சிந்துவின் வயிற்றிலேயே அவனை வைத்திருக்கும் படியும், இந்த அமுதக் கலசம் இருக்கும் வரை அவனை எவராலும் வெல்லவோ, கொல்லவோ முடியாது என்றும் சொன்னார். சூரியனிடமிருந்து அமுதக் கலசம் பெற்றுக் கொண்ட சிந்து தன் தகப்பனான மன்னனை, விரட்டியடித்தான். தானே ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தான். ஆனால், நல்லாட்சிக்கு பதிலாக, கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான். குடிமக்களைத் தொந்தரவு செய்தான். தன்னிடம் அமுதக் கலசம் இருக்கிறது… தன்னை யாராலும் கொல்ல முடியாது என்கிற தைரியத்திலும், மமதையிலும் தேவர்களையும் துன்புறுத்த முனைந்தான். இந்திரனையும், தேவர்களையும் சிறை பிடித்தான். அனைவரையும் காப்பதற்காக வந்த மகாவிஷ்ணுவையும் சிறை பிடித்து, கண்டகி நகரிலேயே சிறை வைத்தான். மற்ற தேவர்களும் பிரம்மாவும் திருக்கயிலைக்குச் சென்று சிந்துவின் கொடுமைகளைப் பற்றி சிவனிடம் முறையிட்டார்கள். விநாயகரால் மட்டுமே அனைவரையும் காப்பாற்ற முடியும். ஆகவே அனைவரும் அவனைச் சரணடையுங்கள் என்று அருளினார் சிவன். 

  god

  சிவனின் வார்த்தைகளின்படி அனைவரும் விநாயரை வணங்கி வேண்டிக் கொள்ள, அவரும் தான் மீண்டும் பிறவி எடுக்கும் போதே சிந்துவை அழிக்க முடியும் எனக் கூறினார். விநாயகர் மீண்டும் பிறப்பது எப்படி? அனைவரும் கலங்கினார்கள். மேரு மலையில் ஈசனோ அன்னைக்கு “ஓம்” எனும் ப்ரணவத்தை உபதேசித்துப் பன்னிரண்டு வருடங்கள் ஜபிக்கும் படி கூறினார். பார்வதி தேவி, களிமண்ணால் விநாயகரை அமைத்து ஈசன் கூறியபடி வழிபடலானாள். அவள் செய்த வழிபாட்டால் உயிர் பெற்றார் விநாயகர். 
  ஈசனும் அவரை ஆசீர்வதித்து, விக்னேஸ்வரனை வணங்கி விட்டு வேலை ஆரம்பிப்பவர்களுக்குத் தடையில்லாமல் வேலை நடக்கும் என அருளினார்! அதனால் தான் இன்று வரையில் நாம் எந்த வேலையைப் புதிதாய் துவங்கினாலும் முதலில் விநாயகரை வழிபட்டு பின் துவங்குகிறோம். அனைவரும் மேரு மலையிலிருந்து இறங்கி வரும் வேளையில் கமலாசுரன் என்பவனைக் கண்டார்கள். குதிரை மீது அமர்ந்திருந்த அவன், விநாயகரோடு சண்டை போட்டான். அப்போது விநாயகரால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. அவன் உடலில் காயம் பட்டுக் கீழே விழும் ரத்தத் துளிகளில் இருந்து மீண்டும் மீண்டும் அசுரர்கள் உற்பத்தியாகிக் கொண்டே இருந்தார்கள்.  ஆகவே பிரம்மாவின் மானச புத்திரிகளான ஸித்தியையும், புத்தியையும் அழைத்து அந்த ரத்தத் துளிகள் கீழே விழாமல் அப்படியே குடிக்கும்படி விநாயகர் சொல்ல, அவர்களும் அவ்வாறே குடித்தனர். அதன்பிறகு, கமலாசுரனை விநாயகர் கொன்றார். அதையடுத்து, கண்டகி நகரில் சிறைப்பட்டிருந்த அனைவரையும் விடுவிக்கும்படி சொல்ல, சிந்து ஆணவத்துடன் முடியாது என்று மறுத்தான். ஆவேசமான விநாயகர், சிந்துவுடன் போரிட்டார். விநாயகர் தொடுத்த பாணம், சிந்துவின் வயிற்றைக் கிழித்து அமுதக் கலசத்தை உடைத்து நொறுக்கியது. சிந்து செத்துப்போனான். 

  vinayagar

  கண்டகி நகரின் பொறுப்பை விநாயகர் ஏற்றார். ஸித்தி, புத்தியை மணந்தார். இந்தப் போரில், விநாயகர் மயிலை வாகனமாய்க் கொண்டு போரிட்டதால் அனைவராலும், விநாயகர் மயூரேசர் என அழைக்கப்பட்டார் என்கிறது புராணம்! புனே நெடுஞ்சாலையில் புனேயிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இன்றைக்கும் அழகும் குறும்பும் ததும்ப அருள்பாலிக்கும் மயூரேசரை தரிசிக்கலாம்!