விநாயகர் சதுர்த்தியை இனிப்பாக்க கொழுக்கட்டை ரெசிபிகள்!

  0
  1
  கொழுக்கட்டை

  விநாயகர் சதுர்த்தி என்றாலே விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டையும் ஸ்பெஷல் தானே..? கொழுக்கட்டை இல்லாத விநாயகர் சதுர்த்தியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. எப்போதும் போல அதே வழக்கமான ரெசிபியாக கொழுக்கட்டையைச் செய்யாமல், இந்த விநாயகர் சதுர்த்திக்கு விதவிதமான வெரைட்டிகளில் கொழுக்கட்டைகளை செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.

  kozhukattai

  டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை 

  தேவையானவை: 

  அரிசி மாவு – ஒரு கப்
  பேரீச்சம்பழம் – 10
  முந்திரி – 10
  பாதாம்- 10
  பிஸ்தா – 10
  திராட்சை – 50 கிராம்
  வெல்லம் – 50கிராம்
  பொட்டுக்கடலை – 4 டீஸ்பூன்
  எண்ணெய் – 2 டீஸ்பூன்
  உப்பு – ஒரு சிட்டிகை

  செய்முறை: 

  sweeet

  பேரீச்சம்பழத்தை, கொட்டைகளை நீக்கி நன்கு உலர்த்திக் கொள்ளவும். கடாயில் தண்ணீர், உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு, கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரிசி மாவைத் தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். இது தான் மேல் கொழுக்கட்டைச் செய்வதற்கான மேல் மாவு. 

  இப்போது முந்திரி, பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலையை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பேரீச்சம்பழம், திராட்சை, வெல்லம் சேர்த்து அரைத்து, பருப்பு தூள்களை சேர்த்து ஒரு சுற்று, சுற்றி எடுத்தால்  கொழுக்கட்டைக்குள் வைப்பதற்கான பூரணம் தயார். 

  கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மேல் மாவில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து, ஒரு டீஸ்பூன் பூரணத்தை அதன் உள்ளே வைத்து மூடி, வேண்டிய வடிவம் கொடுக்கவும், அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால் கமகம என்று மணம் வீசும் கொழுக்கட்டைத் தயார்.