“விதவையாக வாழ விரும்பவில்லை…விவாகரத்து கொடுங்கள்!” – நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனைவி மனு

  0
  7
  Nirbhaya Case

  தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள அக்க்ஷய் குமாரின் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.

  டெல்லி: தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள அக்க்ஷய் குமாரின் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.

  நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20-ஆம் தேதி காலை 5.30 மணியளவில் தூக்குத் தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் புதிய மரண வாரண்ட் உத்தரவை பிறப்பித்தது. குற்றவாளிகளில் அக்க்ஷய், பவன் மற்றும் வினய் ஆகிய 3 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க கோரி சர்வதேச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

  ttn

  இந்த நிலையில், தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள அக்க்ஷய் குமாரின் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார். காலம் முழுக்க, தான் விதவையாக வாழ விரும்பவில்லை எனவும், தன்னுடைய கணவருக்கு தூக்கு தண்டனை அளிப்பதற்கு முன் விவாகரத்து பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் பிஹார் அவுரங்காபாத் உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மார்ச் 19-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. கணவர் மீது பலாத்காரம், மனித விரோதக் கொலைக் குற்றச்சாட்டுகள் இருக்கும்பட்சத்தில் மனைவி விவாகரத்து பெற உரிமையுள்ளது என்று கூறப்படுகிறது.