விண்டீஸ் அணியுடனான தொடரில் இருந்து விராட் கோஹ்லி, பும்ராஹ்விற்கு ஓய்வு !!

  0
  1
   விராட் கோஹ்லி, பும்ராஹ்

  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
  இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை ரசிகர்களை பதட்டத்திற்கு உள்ளாக்கிய நிலையில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
  இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை ரசிகர்களை பதட்டத்திற்கு உள்ளாக்கிய நிலையில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  virat and bumrah

  இந்த உலகக்கோப்பை போட்டிகள் முடிவடைந்த சில நாட்களில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் அமெரிக்காவில் நடத்தவுள்ளதாக பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு இந்த போட்டிகளிலிருந்து ஓய்வு அளிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

  இந்த போட்டிகளுக்கு பின்னர் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள, சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் இருவரும் களமிறங்குவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.