விடாது பெய்த கனமழை; இரண்டு இளைஞர்கள் பலி: இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!

  0
  1
  கனமழை

  இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருக்க மின்னல் தாக்கி பலியானார்கள்

  சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் வரும்  24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

  வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி, சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்கு மின்தடை ஏற்பட்டதுடன் வீடுகளில் வெல்ல நீர் புகுந்தது. 

  rain

  இதேபோல் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அருண்பிரசாத், குமார் என்ற இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருக்க மின்னல் தாக்கி பலியானார்கள். இதை தொடர்ந்து திருவாரூர், திருச்சி,நாகை, திருப்பூர்  உள்ள மாவட்டங்களில்  பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 

  rain

  இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் வரும்  24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
  இதில் தஞ்சாவூர், தூத்துக்குடி, வேலூர் ,சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.