விடாது பரவும் கொரோனா வைரஸ்…… பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,122ஆக உயர்வு…. பலி எண்ணிக்கை 30ஆக அதிகரிப்பு….

  0
  4
  மருத்துவ பரிசோதனை

  நம் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,122ஆக உயர்ந்துள்ளது. இந்த தொற்று நோய்க்கு 30 பேர் பலியாகி உள்ளனர்.

  உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா வைரஸ் நம் நாட்டிலும் தீவிரவமாக பரவி வருகிறது. இந்த தொற்று நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.

  கொரோனா வைரஸ்

  நம் நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாட்கள் முடக்கத்தை அறிவித்தது. மேலும், சமூக விலகலை கடைப்பிடிக்கும்படி பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  மாஸ்க் அணிந்து செல்லும் மக்கள்

  மாநில அரசுகளின் அறிக்கையின்படி,நேற்று வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,122ஆக உயர்ந்துள்ளது. 30 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். ஆனால் மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி பார்த்தால் இந்த எண்ணிக்கைகள் சற்று குறைவாக உள்ளது. 1,024 பேருக்கு கொரோனா வைரஸ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 27 பேர் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம தெரிவித்துள்ளது. இந்த வித்தியாசத்துக்கு காரணம் மாநில அரசுகளின் அறிக்கைகள் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்படுவதே இதற்கு காரணம்