விஜய் படத்தைத் தூக்கியெறிந்த தியேட்டர்! வரலாறு முக்கியம் அமைச்சரே! சாதனைப் படைத்த அட்லி!

  0
  6
  பிகில்

  பண்டிகைத் திருநாளில் ரிலீஸான படமாக இருந்தாலும், சரியில்லை என்றால் தியேட்டரை விட்டு தூக்கியெறிந்து விடுவார்கள் என்பது நேற்று நிரூபணமாகியுள்ளது.

  விஜய்- நயன்தாரா  நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி வெளியான பிகில் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கால் பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படத்தை பார்க்க முதல் 3 நாட்களில் டிக்கெட் கிடைக்காமல் பல ரசிகர்கள் அல்லாடினார்கள். டிக்கெட் கிடைக்காததால் சிலர் ரூ.800, ரூ.1000 என அதிக பணம் செலுத்தி பிகில் படத்தைப் பார்த்தனர். இப்படம் ரிலீஸ் ஆன முதல் ஐந்து நாட்களில் 200 கோடியை வசுல் செய்ததாக தகவல்கள் கசிந்தன. ஆனால் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வசூல் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. படம் பார்த்து விட்டு வெளியில் வந்த ரசிகர்கள் கூட விஜய்க்காக படம் பார்த்ததாகவும், கதையில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை என்றும் விமர்சனங்களை முன்வைத்தனர். 

  bigil

  என்ன தான் பெரிய ஸ்டார்களின் படங்கள் என்றாலும், படத்தில் கதை என்று ஏதாவது இருந்தால் தான் படம் வசூல் ரீதியாக வெற்றிப் பெறுகிறது. பண்டிகைத் திருநாளில் ரிலீஸான படமாக இருந்தாலும், சரியில்லை என்றால் தியேட்டரை விட்டு தூக்கியெறிந்து விடுவார்கள் என்பது நேற்று நிரூபணமாகியுள்ளது.

  devi

  பிகில் படம் ரிலீஸ் ஆகி 7 நாட்களே ஆன நிலையில், சென்னையில் இயங்கி வரும் பிரபல திரையரங்கான தேவி பாரடைஸில் பத்து பேர் மட்டுமே படம் பார்க்க வந்ததால், ‘பிகில்’ படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இதுவே விஜய்-அட்லி கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. விஜய் அறிமுகமான முதல் படமான ‘ரசிகன்’ துவங்கி இதுநாள் வரையில் விஜய்யின் எந்த படமுமே தியேட்டரில் பத்து பேர் கூட வரவில்லை என்று டிக்கெட் எல்லாம் கொடுத்து விட்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டதில்லை. அந்த விஷயத்தில் விஜய்யின் கறுப்பு பக்க வரலாற்றில் அழிக்கவே முடியாத ஆட்டோகிராஃப் போட்டு புண்ணியத்தைச் சேர்த்திருக்கிறார் இயக்குநர் அட்லி.