விஜய் சேதுபதி விளம்பரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தது ஏன்? மண்டி நிறுவனம் விளக்கம்!

  0
  14
  Mandee

  விளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தது ஏன் என மண்டி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

  விளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தது ஏன் என மண்டி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

  நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில்  ‘மண்டி’ என்ற தனியார் ஆன்லைன் நிறுவன  விளம்பரத்தில் நடித்திருந்தார்.  இது விவசாயத்தையும், வியாபாரிகளையும் வஞ்சிப்பதாக கூறி தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பினர் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  விஜய் சேதுபதி

  இந்நிலையில் மண்டி நிறுவனம் வெளியிட்ட செய்திகுறிப்பில்,  “நடிகர் விஜய் சேதுபதி மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. விவசாயிகளுக்கு பலனளிக்கும் என்பதாலேயே விளம்பரத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்தார். வியாபாரிகள் வருமான வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை தளம் உருவாக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.