விஜய் சேதுபதியுடன் முதன்முறையாக கைக்கோர்க்கும் விவேக்! 

  0
  3
  Vivek

  விஜய் சேதுபதியின் 33வது படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடிகர் விவேக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இயக்கத்தில்‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்தை கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே விஜய் சேதுபதியுடன், விவேக் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

  விஜய் சேதுபதி நடிப்பில் சங்க தமிழன், மாமனிதன், லாபம், தளபதி 64, கடைசி விவசாயி ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராகவுள்ளன.