விஜய் சேதுபதியின் 4 லட்சம் ரூபாய் சொகுசு பைக் : நம்பர் பிளேட்டின் ரகசியம்!

  0
  2
  விஜய் சேதுபதி

  நடிகர்  விஜய் சேதுபதி 4 லட்ச ரூபாய் மதிப்பில் புத்தம் புதிய பைக் ஒன்றை  வாங்கியுள்ளார். 

  நடிகர்  விஜய் சேதுபதி 4 லட்ச ரூபாய் மதிப்பில் புத்தம் புதிய பைக் ஒன்றை  வாங்கியுள்ளார். 

  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம்  வருபவர் விஜய் சேதுபதி. எந்த ஒரு சினிமா பின்புலனும் இல்லாமல் தனியாக சாதித்து உச்ச நடிகராக நிற்கிறார். விஜய் சேதுபதியின் பேச்சு, சிரிப்பு, பாடிலேங்குவேஜ் என அவரை பின்பற்றவும் ஒரு கூட்டம் அலைமோதுகிறது.

  vijay

  பல்வேறு கதாபாத்திரங்களில்  நடித்து மக்களின் ஆதசன நாயகனாக மாறியுள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதனால்  ’96’ திரைப்பட இயக்குநர் பிரேம் குமாருக்கு, மிகவும் சர்ப்ரைஸான முறையில், ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) மோட்டார் சைக்கிளை, கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் சேதுபதி பரிசளித்தார்.

  sethupathi

  இந்நிலையில் விஜய் சேதுபதி தனக்காக  பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் பைக் ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் வாங்கினார் . இதன் மதிப்பு 4 லட்சம் ரூபாயாகும்.   இதற்காக   ‘TN01 BH 1979’ என்ற பேன்சி நம்பரை பெற்றுள்ளார்.  இந்த எண்ணின் ரகசியம் என்ன? என்று அவரது ரசிகர்கள் மண்டையைக் குழப்பி கொண்டு இருந்தனர். அதற்கான விளக்கம் தற் போது தெரியவந்துள்ளது.  1979 என்பது விஜய் சேதுபதியின் பிறந்த வருடமாம். அதை  குறிப்பிடும் வகையில்தான் இந்த பதிவு எண்ணை சேதுபதி பெற்றுள்ளார்.