விஜய் சங்கரை விட இவர் தான் பெஸ்ட்; அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !!

  0
  2
  விஜய் சங்கர்,அம்பத்தி ராயூடு

  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு விஜய் சங்கரை விட அம்பத்தி ராயூடுவே தகுதியானவர் என முன்னாள் வீரர் சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.

  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு விஜய் சங்கரை விட அம்பத்தி ராயூடுவே தகுதியானவர் என முன்னாள் வீரர் சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.

  ambati rayudu

  கிரிக்கெட் உலகின் வல்லரசை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது. உலகக்கோப்பையை தட்டி தூக்க அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், மறுபுறம் முன்னாள் வீரர்கள் பலர் ஒவ்வொரு அணிகளுக்கும் தங்களது அறிவுரைகளை, ஆலோசனைகளையும் வழங்குவதில் படுபிசியாக இயங்கி வருகின்றனர். 

  vijayshankar vs ambati rayudu

  அந்த வகையில், இந்திய அணியில் கடந்த இரண்டு வருட காலமாக தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வரும் நான்காவது இடத்திற்கான வீரர் குறித்து பேசிய முன்னாள் வீரர் சையத் கிர்மானி, இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு அம்பத்தி ராயூடுவே தகுதியானவர்” என்று தெரிவித்துள்ளார். 

  இது குறித்து பேசிய அவர், ஐ.பி.எல் தொடரில் காயமடைந்த கேதர் ஜாதவ் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடாவிட்டால் அவருக்கு பதிலாக அம்பத்தி ராயூடுவிற்கு அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும், என்னை பொருத்துவரையில் இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு விஜய் சங்கரை விட அம்பத்தி ராயூடுவே பொருத்தமானவர்” என்று தெரிவித்துள்ளார்.