விஜய் ஆண்டனி பட இயக்குனரோடு கைகோர்க்கும் ஹரிஷ் கல்யாண்?

  0
  3
  ஹரிஷ் கல்யாண்

  இயக்குநர் சசி இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஹரிஷ் கல்யாண் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

  சென்னை: இயக்குநர் சசி இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஹரிஷ் கல்யாண் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

  தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் நடித்த பியார் பிரேமா காதல் படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது மட்டுமின்றி வசூலில் முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படமும் ரசிகர்களைக் கவர தவறவில்லை. 

  இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து தனுசுராசி நேயர்களே என்ற நகைச்சுவை கலந்த படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பாலிவுட்டில் வெற்றிபெற்ற விக்கி டோனர் படத்தின் தமிழ் ரீமேக்கில் படத்திலும் நடித்து வருகிறார். 

  harish kalyan

  இந்த நிலையில் தற்போது சசி இயக்கவுள்ள புதிய படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தையும்  இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படத்தைத் தயாரித்த பாலாஜி கபா தயாரிக்கவுள்ளதாகப் பேசப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. 

  முன்னதாக இயக்குநர் சசி விஜய் ஆண்டனி வைத்து இயக்கிய பிச்சைக்காரன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்காது.