விஜயபாஸ்கர் ஆரோக்கியமாக இருக்கிறாரா? – காங்கிரஸ் எம்.பி எழுப்பிய சந்தேகம்

  0
  5
  Is Minister Vijayabaskar quarantined?

  தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் ஆரோக்கியமாக உள்ளாரா என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி விஷ்ணு பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

  தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தினமும் எவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை எல்லாம் விஜயபாஸ்கர்தான் தினமும் பேட்டி மூலம் தெரியப்படுத்தி வந்தார். ஆனால், தற்போது அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் தங்கியிருக்க வேண்டிய அமைச்சர் சொந்த ஊரில் உள்ளார் என்று கூறப்படுகிறது. அவ்வப்போது ஏதாவது ஒரு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வந்துவிட்டு பேட்டி அளித்துவிட்டு சென்றுவிடுகிறார். மற்றபடி சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்தான் அனைத்தையும் கவனித்து வருகிறார்.

  இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உடல் நலம் மற்றும் மனநலம் பற்றி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “தமிழ் நாடு சுகாதார அமைச்சர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளாரா? அவரின் உடல் மற்றும் மன நிலை பற்றி தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்” என்று கூறியுள்ளார்.