விஜயகாந்த் மைத்துனருக்கு அடித்தது லக்… பாஜக கொடுக்கும் முக்கியப்பதவி..!

  0
  8
  பிரேமலதா

  தேர்தல் நேரத்தில் ஒரு ஒப்பந்தம் போட்டு இருந்தார்கள். அதாவது, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷுக்கு, மத்திய அமைச்சருக்கு இணையான வாரிய தலைவர் பதவி தர வேண்டும் எனக் கேட்டு இருந்தார்கள்.

  மக்களவை தேர்தலில்  அ.தி.மு.க., – பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க.,வினர் இடம் பிடித்திருந்தனர். பாமகவுக்கு 6 +1 தொகுதிகள் கொடுக்கப்பட்ட போதே தேமுதிகவினர் அதிருப்தியாகி விட்டனர். ஆனாலும் பாஜக கூட்டணியில் இருந்ததால் ஏதாவது பலன் கிடைக்கும் என அந்தக் கூட்டணியில் ஒட்டிக்கொண்டது தேமுதிக. 

  அக்கட்சி போட்டியிட்ட, நான்கு தொகுதிகளிலும் தோல்வியே மிஞ்சியது. ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரு ஒப்பந்தம் போட்டு இருந்தார்கள். அதாவது, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷுக்கு, மத்திய அமைச்சருக்கு இணையான வாரிய தலைவர் பதவி தர வேண்டும் எனக் கேட்டு இருந்தார்கள். இப்போது, பல்வேறு வாரியங்களில்  தலைவராக இருப்பவர்களின் பதவிக் காலம், பிப்ரவரி மாதம் காலியாகிறது.

  அதனால், புத்தாண்டுக்கு பிறகு சுதீஷுக்கு புது பதவி கொடுக்கிறோம் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், உத்தரவாதம் கொடுத்து இருக்கிறார்.