விஜயகாந்த் பிறந்த நாளில் சபதம்… தவிக்க விடப்போகும் பிரேமலதா..!

  0
  1
  president-vijayakanth-organized-fisherfolk-atrocities-kazhagam-committed_d006b0c0-35fb-11e9-afff-f2b249e2444d

  கட்சியை வலுப்படுத்துவதின் முதல்படியே தம்பி எல்.கே.சுதீஷை ஒதுக்கி வைப்பது தான் என்கிற முடிவுக்கு வந்துள்ளார்.

  இனி எல்லாம் என் மகன் தான்… தம்பியை நம்பி நம்பி வெம்பியது போதும் என தனது கணவர் விஜயகாந்த் பிறந்தநாளின் போது சபதமாக ஏற்க உள்ளார் பிரேமலதா விஜயகாந்த். 

  தேமுதிகவில் பிரேலமலதா தனது சகோதரர் எல்.கே.சுதீஷுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், இதனால் கட்சியினர் கலக்கத்தில் இருந்து வருவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் தம்பியை விட்டுக் கொடுக்காமல் அரவணைத்து வந்தார் பிரேமலதா.  ஆனாலும் இனியும் இதே நிலை தொடர்ந்தால் கட்சி காணாமல் போவது உறுதி என்பதை உணர்ந்து கொண்ட பிரேமலதா உள்ளாட்சி தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறார். premalatha

  கட்சியை வலுப்படுத்துவதின் முதல்படியே தம்பி எல்.கே.சுதீஷை ஒதுக்கி வைப்பது தான் என்கிற முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி, தே.மு.தி.க., தலைமையில் இருந்து, கட்சிக்காரர்களுக்கு, சமீபத்தில் பிரேமலதாவிடம் இருந்து ஒரு உத்தரவு போயிருக்கிறது. ‘இனிமேல், கட்சியின் போஸ்டர், பேனர், அழைப்பிதழ்களில், நான்கில் ஒரு பங்குக்கு விஜயகாந்த் படங்களை போடுங்கள். அதில் பாதி அளவு, எனது படம். அடுத்து விஜயபிரபாகரன் படம். மற்ற நிர்வாகிகள், யார் படங்களும் இருக்கக் கூடாது’ என உத்தரவு பறந்திருக்கிறது. எங்கேயும் சுதீஷ் படங்களை போட வேண்டாம் என சொல்லி இருக்கிறார். இனி, தம்பியின் முக்கியத்துவத்தை குறைத்து, மகனை முன்னிலைப்படுத்தவே, பிரேமலதா இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.