விஜயகாந்த் குடும்பத்தை விட ரஜினி குடும்பம் ரொம்ப மோசம்… கிழித்தெடுக்கும் விமர்சனம்..!

  0
  2
  ரஜினிகாந்த்

  அந்த விதத்தில் விஜயகாந்த் குடும்பத்தை விட பல மடங்கு அசிங்க பட்ட செய்திகளில் அடிபட்டவர்கள். இவர்களால் அரசியலில் மேலும் பல தர்மசங்கடங்களை எதிர்கொள்ள போகிறார்.

  விஜயகாந்த் குடும்பத்தை விட ரஜினி குடும்பம்  செக் மோசடி, சம்பள விவகாரம் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளதாக திமுக நிர்வாகி சுதர்சனம் தெரிவித்துள்ளார்.

  rajini

  இது குறித்து அவர், ’’இறைவன் அருளால் ரஜினி முதலில் தேர்தல் அரசியலுக்கு வரட்டும். அப்பொழுது இதுவரை அமைதியாக இருந்த பலர் இவருடைய வாழ்க்கையில் இவர் சறுக்கிய சறுக்கல்கள், இவர் செய்த தனிப்பட்ட முறையிலான தவறுகள் அனைத்தும் பலரும் பொது வெளியில் அள்ளி கொட்டுவார்கள். 

  அவற்றை சரி கட்டவே இவருக்கு நேரம் சரியாக இருக்கும். அப்பொழுது இவர் மேல் மக்களுக்கு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் மரியாதையும் காணாமல் போகும். இது போக சுப்ரமணிய சுவாமி போன்ற ஆட்கள் ஆதாரத்துடன் பல தகவல்களை வெளி கொணருவார். 

  vijayakanth

  அதுவும் இவருக்கு பல பல சிக்கல்களை ஏற்படுத்தும். இவருக்கும் விஜயகாந்த் போல இல்லை அதை விட பெரிய சுயநலமிக்க குடும்பம் உள்ளது.. அந்த குடும்ப ஆட்கள் இப்பொழுதே பல முறை பத்திரிக்கைகளில் தவறான செய்திகளில் அதிகம் இடம் பெற்று இருக்கிறார்கள். எல்லாவிதமான தவறான காரணங்கள் அதாவது பண மோசடி, காசோலை திரும்பிய வழக்கு, தகராறு, என பல பல.

  rajinikanth

  அந்த விதத்தில் விஜயகாந்த் குடும்பத்தை விட பல மடங்கு அசிங்க பட்ட செய்திகளில் அடிபட்டவர்கள். இவர்களால் அரசியலில் மேலும் பல தர்மசங்கடங்களை எதிர்கொள்ள போகிறார். இவற்றை எல்லாம் ஆண்டவன் அருள்  அரசியலில் நுழைந்துவிடாமல் காப்பாற்றட்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.