விஜயகாந்த் கட்சிக்கு வில்லனாகும் அமைச்சர் பாஸ்கர்!

  0
  4
   அமைச்சர் பாஸ்கர்

  தமிழ்நாட்டு அமைச்சர்களுக்கும் கமலஹாசனுக்கும் முதல் நாளில் இருந்தே மோதல்தான்.ஆனால்,ரஜினியிடன் கொஞ்சம் தயக்கம் காட்டினார்கள்.ஒரு வேளை அவர் நாளை பிஜேபியில் இணைந்து விடுவாரோ என்கிற அச்சத்தில்.ஆனால் எனக்கு காவிச்சாயம் பூச முடியாது,சிக்க மாட்டேன் என்று ரஜினி சொன்ன மறுநாளே ‘காம்பவுண்டுக்குள் ‘ இருந்து கொண்டு பேசாமல் களத்தில் வந்து பேசுங்கள் என்று எடப்பாடியால் கலாய்க்கப் பட்டார்.

  vijayakanth

  தேமுதிக,அதிமுகவின் கூட்டணி கட்சி என்பதால் அவரை மட்டும் ‘நடிகர் கட்சி’ வரம்புக்குள் கொண்டு வராமல் இருந்தார்கள். ஆனால் கால்நடைத்துறை விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பாஸ்கர் கட்டுத்தறியில் இருந்து கூட்டணி என்கிற கயிற்றை அறுத்துக்கொண்டு பாய்ந்து தேமுதிகவை முட்டித் தள்ளி விட்டார்.

  ஏற்கனவே அமைச்சர் பாஸ்கர் காரைக்குடியில் நடந்த கூட்டத்தில்,செல்போனை கண்டுபிடித்தவனை தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டும் என்கிற ஆவேசத்தில் இருந்தார்.அவருக்கும் வேட்டி மேல் ஒரு கோட்டைப் போட்டு ஒபிஎஸ்ஸுடன் அமெரிக்காவுக்கு அனுப்பி இருந்தால்,அவரும் சிக்காக்கோவுக்குப் போய் செல்ஃபோனைக் கண்டுபிடித்த , மோட்டரோலா கம்பெனி ஓனர் மார்ட்டின் கூப்பரை தூக்கிப் போட்டு மிதித்து தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டு இருப்பார்.

  vijayakanth

  அதை செய்யாததால் இப்போது உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணிக்கு குழி பறித்து விட்டார்.சம்பவம் நடந்தது சிவகங்கையில்.
  கால்நடைத்துறை சார்பாக நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பாஸ்கர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
  அவர்களிடம் அரசு நலத்திட்டம்,காரைக்குடி தனிமாவட்டமாகுமா போன்ற உப்புச்சப்பில்லாத விசயங்களைப் பேசிவிட்டு நடிகர்கள் கட்சி துவங்குவது பற்றி கருத்துத் தெரிவித்தார்.

  ‘நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்தார்கள்,உங்களுக்குத் தெரியாததில்ல, விஜயகாந்த் கூட கட்சி ஆரம்பித்தார்.அவரோட கட்சியே இப்படி ஆயிருச்சு…!. இனிவரும் காலதில் நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கறதெல்லாம் சரிப்பட்டு வராது’ என்று சொல்லி இருக்கிறார்.

  bhaskar

  கூட்டணிக் கட்சி அமைச்சரே தேமுதிக செயல்படாத கட்சி ஆகிவிட்டதாக அமைச்சர் பேசியிருப்பது கோயம்பேட்டில் குமுறலை ஏற்படுத்தி இருக்கிறதாம்.விரைவில் திருமதி விஜயகாந்திடம் இருந்து அமைச்சருக்கு அதிரடி பதில்.வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.