விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுவது அபாண்டமானது: வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம்!

  0
  1
  ப. சிதம்பரம்

  ஐஎன்எக்ஸ் வழக்கு விசாரணையில் ப. சிதம்பரம் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு என அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

  புதுடெல்லி:  ஐஎன்எக்ஸ் வழக்கு விசாரணையில் ப. சிதம்பரம் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு என அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

  chithambaram

  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்வதைத் தடுக்க,  ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தார். ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த விசாரணையில் சிதம்பரம் சார்பில் அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். அப்போது, அமலாக்கத் துறையினர் ஏற்கனவே மூன்று நாட்கள் விசாரணை நடத்திய நிலையில், ப. சிதம்பரம் ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறுவது அபாண்டமான பொய் என்று குற்றஞ்சாட்டினார். மேலும் 11 ஆண்டுகள் பழமையான இந்த வழக்கில் இன்னும் ஆவணங்களைச் சிதைக்க என்ன இருக்கிறது? இந்த வழக்கு 2009ம் ஆண்டுதான் கொண்டு வரப்பட்ட  சட்டத்திருத்தத்தின் படி பதியப்பட்டது. ஆனால் 2007ம் ஆண்டில் நடந்த ஒரு நிகழ்வை அதற்கு முன் தேதியிட்டு குற்றமாக எப்படிக் கருத முடியும்? என்று சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுத்தார். 

  singhvi

  சிதம்பரம் தரப்பின் வாதங்களுக்குப் பதில் தர தமக்கு அவகாசம் தேவை என அமலாக்கத்துறை வழக்கறிஞர்  கேட்டுக்கொண்டதை அடுத்து வழக்கை நீதிபதிகள் இன்றைக்கு ஒத்திவைத்தனர்.முன்னதாக  இன்று விசாரணை முடியும் வரை சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.