விக்ரம் வீட்டில் இருந்து மற்றொரு நாயகன் உதயமாகிறார்! 

  0
  9
  நயன்தாரா,த்ரிஷா

  துருவ் விக்ரமை தொடர்ந்து விக்ரம் மருமகன் அர்ஜுமன் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். 

  சென்னை: துருவ் விக்ரமை தொடர்ந்து விக்ரம் மருமகன் அர்ஜுமன் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். 

  சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். அவரை தொடர்ந்து விக்ரம் வீட்டில் இருந்து மற்றொரு நாயகன் சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். ஆம்… விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமனும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

   தாதா 87 திரைப்பட இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (pubg) என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பிக் பாஸ் போட்டியாளர்களான ஐஸ்வர்யா தத்தா, ஜூலி ஆகியோர் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அர்ஜுமன் இந்த படத்தில் ஐஸ்வர்யாவை எதிர்த்துப் போராடும் நாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

   Arjuman

  இதுகுறித்து விஜய் ஸ்ரீ ஜி கூறுகையில், ‘நான் முதலில் அர்ஜுமனை விளம்பர மாடல் என்று நினைத்தேன். பின்னர் தான் நடிக்க ஆர்வமுடன் இருக்கிறார் என்பது தெரிந்தது. அவரது தோற்றமும் முக்கியமாக ஹேர் ஸ்டைலும் எனது கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. திரைக்கதையை எழுதியபின் படத்தில் நடிக்க அவரிடம் கேட்டேன். விக்ரமிம் மருமகன் என்று தெரியாது. சிறிது நாட்களுக்குப் பிறகு தான் அவர் தோற்றம் விக்ரமின் சாயலில் இருப்பதை உணர்ந்தேன். அப்போது தான் அர்ஜுமன் விக்ரமின்  தங்கை மகன் என்று என்னிடம் கூறினார்’.