விக்னேஷ் சிவன் படத்தில் கமிட்டான அஞ்சலி 

  0
  1
  அஞ்சலி-விக்னேஷ் சிவன்

  நடிகை அஞ்சலி தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். 

  சென்னை: நடிகை அஞ்சலி தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். 

  நடிகை அஞ்சலி நடிப்பில் சமீபத்தில் பேரன்பு, லிசா போன்ற படங்கள் வெளியானது. அதைத்தொடர்ந்து அவர் கைவசம் நாடோடிகள் 2, கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் உருவாகும் படம், மாதவன் நடிக்கும் சைலன்ஸ் ஆகிய படங்கள் உள்ளன.

  இந்த நிலையில் தற்போது அஞ்சலி விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். நான்கு குறும்படங்களை உள்ளடக்கிய ஆந்தலாஜி பாணியில் உருவாகும் இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. 

  நான்கு இயக்குநர்கள் இயக்கும் இந்தப் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கும் குறும்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் மற்ற குறும்படங்களை வெற்றி மாறன், சுதா கொங்காரா, கௌதம் மேனன் ஆகியோர் இயக்கவுள்ளனர்.