விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி! அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்!

  0
  1
  Udhayanidhi stalin

  விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க வும்  நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸும்  போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும்,  வரும் 24 ஆம் தேதி போட்டியிடப் போகும் உறுப்பினர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் போட்டியிட போகிறதா இல்லை தி.மு.க போட்டியிடப் போகிறதா என்று மு.க ஸ்டாலினும் கே.எஸ் அழகிரியும் ஆலோசனை நடத்தினார்கள்.

  Stalin and Azhagiri

  ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின்,  விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க வும்  நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸும்  போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும்,  வரும் 24 ஆம் தேதி போட்டியிடப் போகும் உறுப்பினர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

  இதனையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலின் விருப்ப மனு நாளை முதல் அண்ணா அறிவாலயத்தில்  விநியோகிக்கப் படப்போவதாக தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

  Udhayanidhi stalin

  இது சமயம், அண்ணா அறிவாலய வட்டாரத்தில், விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், உதயநிதி ஸ்டாலின் பெயரை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் நிர்வாகிகள் உச்சரித்ததை திமுக தொண்டர்கள் யாரும் ரசிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலங்களால், தீவிர தேர்தல் பிரச்சாரம், இளைஞர் அணி தலைவர் பதவி என்று கட்சிக்குள் வேகமாக முன்னேறி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். கட்சிக்குள் உதயநிதி ஸ்டாலினின் இந்த வளர்ச்சியை பெரும்பாலும் யாரும் ரசிக்காத நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலினைப் போட்டியிட வைத்தால், கட்சிக்கு மொத்தமாக வாக்குகள் சரியக் கூடும் என்றும்,  தற்போது ஆளுங்கட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாலும், பழைய விழுப்புரம் தொகுதியில் திமுக ஏற்கெனவே பலமாக இருப்பதாலும், இந்த தேர்தலில் உதயநிதியை களமிறக்கினால், எளிதில் வெல்வார் என்று கட்சி மேலிடம் கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  ஏற்கெனவே குடும்ப அரசியல்னு கட்சிக்கு கெட்டப் பெயர் இருக்கு. கட்சி நிர்வாகிகள் யாரையுமே உதயநிதி மதிக்காமல், எப்போதும் அன்பில் மகேஷ் போன்ற வெகு சிலருடம் மட்டுமே நெருக்கமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இதெல்லாமே கட்சிக்கு கெட்டப் பெயர் தான்.. கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை எல்லாம் ஸ்டாலின் இழந்து வருகிறார் என்று புலம்பி வருகிறார்கள் திமுக தொண்டர்கள்!