வாஸ்து தோஷங்களைப் போக்கி செல்வம் தரும் சங்கு!

  0
  15
  சங்கு

  ‘அய்யையோ… குபேரன் மூலையில பாத்ரூமை கட்டியிருக்கீங்க… கிச்சனை இடிச்சு பாத்ரூம் கட்டுங்க… ‘ என்று அரைகுறை வாஸ்து அறிவுடன் சில சொந்தக்கார வஸ்துக்கள் நம்மை கலவரப்படுத்துவார்கள். நெருங்கின சொந்தமாக இருந்தால், பதில் பேசாமல் செலவை இழுத்து வைப்பார்கள். வாடகை வீடுகளில் நாம எப்படி வாஸ்து படி மாற்றமுடியும் என்று ஒரு வாசகி மெயில் அனுப்பியிருந்தார்.  வாஸ்தவம் தான்… வாடகை வீடுகளில் மட்டுமல்ல..

  ‘அய்யையோ… குபேரன் மூலையில பாத்ரூமை கட்டியிருக்கீங்க… கிச்சனை இடிச்சு பாத்ரூம் கட்டுங்க… ‘ என்று அரைகுறை வாஸ்து அறிவுடன் சில சொந்தக்கார வஸ்துக்கள் நம்மை கலவரப்படுத்துவார்கள். நெருங்கின சொந்தமாக இருந்தால், பதில் பேசாமல் செலவை இழுத்து வைப்பார்கள். வாடகை வீடுகளில் நாம எப்படி வாஸ்து படி மாற்றமுடியும் என்று ஒரு வாசகி மெயில் அனுப்பியிருந்தார்.  வாஸ்தவம் தான்… வாடகை வீடுகளில் மட்டுமல்ல.. சொந்த வீட்டிலும் வாஸ்து படி கட்டவில்லையென்றாலும், வீட்டினை இடித்து கட்டாமல் அதனை சரிசெய்து கொள்ளலாம். 

  conch

  வலம்புரி சங்கு இந்த அற்புதத்தைச் செய்கிறது. பாற்கடலை கடையும் போது ஸ்ரீ மகாலட்சுமியுடன் வலம்புரி சங்கு தோன்றியதாக கூறப்படுகிறது. அப்படி வலம்புரி சங்கு தோன்றும் போது, கூடவே முத்து, பவளம் போன்ற பொருட்களும் தோன்றியது. 
  பிரணவ மந்திரத்தின் அடையாளமாகப் புனிதப்பொருளாக வலம்புரிச் சங்கு கருதப்படுகிறது. திருமகளுடன் தோன்றிய வலம்புரி சங்கை எடுத்து, தனது கரத்தில் தாங்கிக் கொண்டார் திருமால்.  வலம்புரிசங்கு இருக்கும் இடங்களில் எல்லாம் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது. கண்திருஷ்டி, பகைவர்களின் தீயச் செயல் என்று அனைத்துமே வலம்புரி சங்கு இருக்கும் இடங்களில் பலமிழந்து போய் விடும். அந்த வீடுகளில் எப்போதும் கடன் பிரச்சினைகள் இருக்காது. குறிப்பாக வலம்புரி சங்கு இருக்கும் இடங்களில் வாஸ்துவினால் தோஷங்கள் எதுவும் ஏற்படாது. 
  ஆனால், வலம் புரி சங்கைப் பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து பூஜையும், அபிஷேகமும் செய்து வர வேண்டும். எங்க வீட்ல இருக்கே… ஆனாலும் பிரச்சனைகளுக்கும் இருக்கு’ என்று சொல்லக்கூடாது. தொடர்ந்து பூஜையும், அபிஷேகமும் செய்து வந்தால் நிச்சயம் பிரச்சனைகள் எழாது. வலம்புரி  சங்கினால் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம். வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் உணவு பஞ்சமே வராது. வலம்புரிச் சங்கு பூஜை செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும்.

  conch

  இருங்க…இருங்க… உடனே வலம்புரி சங்கு வாங்க கிளம்பாதீங்க. அதற்கும் சில நாள், நட்சத்திரம், முறைகள் எல்லாம் இருக்கு. முழுசா படிச்சுட்டு அப்புறம் வாங்குங்க. வலம்புரி சங்கை வளர்பிறை நாட்களில் தான் வாங்க வேண்டும். அப்படி வாங்கி வந்த வலம்புரிச் சங்கை, புனித நதி நீர் இருந்தால், அதில் நீராட்டி சுத்தம் செய்யவேண்டும். வீட்டில் புனித நதிநீர் இல்லாவிட்டால்,  மஞ்சள் கலந்த சுத்தமான நீரில் கழுவலாம். நன்கு கழுவிய பின்னர் மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு பீடத்தின் மீது வைக்க  வேண்டும். வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்த நீரை வீடுகளில் தெளித்து வந்தால் வாஸ்து தோஷங்கள் எல்லாம் விலகி நலம் உண்டாகும். சில பெண்களுக்கு எத்தனை சிரமத்துடன் வரன் பார்த்தாலும், ஏதாவது ஒரு காரணத்தினால் திருமணம் தடைப்படும். குறிப்பாக செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்து வந்தால், செவ்வாய் தோஷம் விலகி திருமணம்  நடந்து விடும். 
  நிறைய கடன் வாங்கி திண்டாடிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று வலம்புரி சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும்.