வாழ்நாள் முழுவதும் நீங்கள் இல்லாத வலியில் துடிக்க போகிறோம்: இயக்குநர் மகேந்திரன் மகன் உருக்கம்

  0
  5
  இயக்குநர் மகேந்திரன்

  மறைந்த இயக்குநர் மகேந்திரன் மகன் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாகப் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார்.

  சென்னை: மறைந்த இயக்குநர் மகேந்திரன் மகன் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாகப் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார்.

  1978-ஆம் ஆண்டு வெளியான ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் மகேந்திரன். அதைத்தொடர்ந்து உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, நண்டு, ஆகிய படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றார்.

  mahendran

  தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு முன்னேற்றியதில் இயக்குநர் மகேந்திரனின் படங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. பல திறமையான நடிகர்களை உருவாக்கிய மகேந்திரன், இன்று அவரே பல படங்களில் வில்லனாகவும்,குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார். விஜயின் தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மகேந்திரன், தொடர்ந்து நிமிர், சீதக்காதி, பேட்ட உள்ளிட்ட படங்களில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் நடிகராகவும் மக்கள் மனதை வென்றுள்ளார்.

  mahendran

  79 வயதான மகேந்திரன் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சைப் பலனின்றி காலமானார். இவரின் உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்திய பின் மந்தைவெளியில் உள்ள செயின்ட் மேரீஸ் கல்லறையில் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  இந்நிலையில் அவரது மகனும் இயக்குநருமான ஜான் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார் அதில், ‘அப்பா… இனி நீங்கள் கால் வலியில் துடிக்க போவதில்லை. முதுகு வலியில் கஷ்டப்பட போவதில்லை. ஆனால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் எங்களுடன் இல்லாத வலியில் நாங்கள் துடிக்க போகிறோம்’ என்று பதிவு செய்துள்ளார். 

  இதையும் படிங்க: அஜீத் பாணியில் வெளிமாநிலங்களுக்கு ஷிஃப்ட் ஆகும் தளபதி 63