வாழ்க்கைனா சில சனியன், சைத்தான்லாம் இருக்கத்தான் செய்யும்: நடிகர் வடிவேலு வெளியிட்ட திடீர் வீடியோ!

  0
  3
  டிகர் வடிவேலு

  நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளையொட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

  நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளையொட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

  தமிழ் சினிமாவில்  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து  தரப்பினரையும் ஈர்த்த  காமெடி நடிகர் வடிவேலு. இவர் சமூகவலைதள  பக்கத்தில் இல்லாவிடினும் அதில் உலாவும் கவுண்டர்களில் வடிவேலு இல்லாத மீம்ஸ்களே கிடையாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் தாண்டி சமீபத்தில் பிரெண்ட்ஸ் படத்தில் இவர் நடித்த காண்டிராக்டர் நேசமணி என்ற வேடம் இந்திய அளவில் டிரெண்டானது.

  vadivelu

  இந்நிலையில்  சன் டிவி தனது டி விட்டர் பக்கத்தில் வடிவேலு பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘செப்டம்பர் 12 என்னுடைய பிறந்த நாள். நான் தினமும் மக்களை சிரிக்கவைக்க பிறந்துட்டு தான் இருக்கேன். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமா நான் பிறந்துட்டு தான் இருக்கேன்.  இந்த நேரத்தில் இவ்வளவு விஷயங்களுக்கும் காரணமானது மக்கள் சக்தி தான்.என்னைப் பெற்றெடுத்த தாய்க்கு நன்றி.’ என்றார்.

   

  தொடர்ந்து பேசிய அவர், ஏன் இவ்ளோ நாள் நடிக்காம இருக்காருனு கேட்பிங்க.  சீக்கிரம் செப்டம்பர் முடியறதுக்குள்ள மிகப்பெரிய ஒரு அருமையான எண்ட்ரியோட வருவேன்.  வாழ்க்கைனா சைத்தான், சனியன் இருக்கத்தான் செய்யும். எல்லோர் வாழ்க்கையில் இருக்கும்.அப்போ என்னோட வாழ்க்கையில இல்லாம இருக்குமா? அங்கங்க ஒன்னு ரெண்டு இருக்கத்தான் செய்யுது’ என்று கூறியுள்ளார்.