வாய்பேச முடியாத பெண் பாலியல் பலாத்காரம்!   தமிழகத்தில் தொடரும் கொடுமைகள்! 

  0
  1
  sexual abuse

  தமிழகத்தின் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை அடைத்து வைத்து செய்த கொடுமைகளை எல்லாம் எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஒரு பொள்ளாச்சி சம்பவம் வெளியே தெரிந்தாலும், இன்னமும் தமிழகம் முழுவதுமே இப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வன்முறையாளர்களும், கயவர்களும் நிறைந்து தான் இருக்கிறார்கள்.

  தமிழகத்தின் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை அடைத்து வைத்து செய்த கொடுமைகளை எல்லாம் எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஒரு பொள்ளாச்சி சம்பவம் வெளியே தெரிந்தாலும், இன்னமும் தமிழகம் முழுவதுமே இப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வன்முறையாளர்களும், கயவர்களும் நிறைந்து தான் இருக்கிறார்கள். பெரும்பாலான தமிழகத்தின் பெண் குழந்தைகள் பத்து வயதைக் கடப்பதற்குள்ளாகவே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்று அதிர்ச்சி அளிக்கிறது ஆய்வு அறிக்கை. 

  இவ்வாறு பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு செக்ஸ் டார்ச்சரை அனுபவிப்பது பெரும்பாலும் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாலேயே என்று மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது அந்த ஆய்வறிக்கை. இந்நிலையில், அப்படியானதொரு சம்பவம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நிகழ்ந்துள்ளது. மன்னார்குடியில்  உள்ள அப்பரசம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவருக்கு  கெளதமி (25) என்கிற மகள் இருக்கிறார். சிறு வயது முதலே கெளதமிக்கு காது கேட்காது, பேச்சும் வராது. வாய் பேச முடியாத, காது கேட்காத கெளதமியை பாதுகாப்புடனும், அக்கறையுடனும் அன்பை செலுத்தி வளர்ந்து வந்திருக்கிறார்கள்.

  rape

  இந்நிலையில், இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு  முன் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தொடர் வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்த கெளதமியை அவரது தந்தை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். கெளதமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். கெளதமியின் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பது தெரியாமல் பெற்றோர்கள் குழம்பி போயிருக்கிறார்கள். தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது யார் என்றும் கெளதமியால் சொல்ல தெரியவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் கெளதமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்