வாயில் சிகரெட்…தாடி என கெட்டப்பை மாற்றிய பிக் பாஸ் தர்ஷன்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

  0
  6
   தர்ஷன்

  ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் தயாரிப்பில் ஒரு படத்தில் தர்ஷனை ஒப்பந்தம் செய்வதாக கமல் மேடையிலேயே  அறிவித்தார்.

  பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷனுக்கு  ரசிகர் பட்டாளம் ஏராளம். இதனிடையே  பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வில் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் தயாரிப்பில் ஒரு படத்தில் தர்ஷனை ஒப்பந்தம் செய்வதாக கமல் மேடையிலேயே  அறிவித்தார்.

  ttn

  இதையடுத்து தர்ஷனின்  அடுத்தடுத்த படங்கள் என்ன? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் அவரது ரசிகர்களை அவரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

  இந்நிலையில் தர்ஷன் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், முகத்தில் தாடி, கையில் சிகரெட், கழுத்தில் ருத்ராட்சமாலை என புது கெட்டப்பில் உள்ளார்.  மேலும் அந்த பதிவில் கம்மிங் சூன் என்று பதிவிட்டுள்ளார். இதை கண்ட  ரசிகர்கள் சிலர்  தர்ஷனுக்கு வாழ்த்து கூறியும் , சிகரெட் பிடிக்குறது தப்புனு தெரியாதா தர்ஷா என்றும் கமண்ட்ஸ் செய்து வருகிறார்ககள்