வாயால் வந்த விபரீதம்… உயிரை இழந்த பாஜக இளைஞரணி பொறுப்பாளர்!

  0
  2
  கொலை

  அரசியலையும், டீக்கடையையும் பிரிக்கவே முடியாது போல… பெரிய பெரிய கட்சியின் தலைவர்களை எல்லாம் ஒரே வார்த்தையில் டீக்கடையின் பெஞ்ச்சில் உட்கார்ந்து காலி செய்து விடுகிற கலாசாரம் இந்தியா முழுக்கவே இருக்கிறது. இந்நிலையில், டீக்கடையில் நடந்த வாக்குவாதத்தில் பாஜக கட்சியின் முன்னாள் நிர்வாகி  படுகொலை செய்யப்பட்டிருப்பது புதுச்சேரி முழுக்கவே பரபரப்பாக பேசப்பட்டது.

  அரசியலையும், டீக்கடையையும் பிரிக்கவே முடியாது போல… பெரிய பெரிய கட்சியின் தலைவர்களை எல்லாம் ஒரே வார்த்தையில் டீக்கடையின் பெஞ்ச்சில் உட்கார்ந்து காலி செய்து விடுகிற கலாசாரம் இந்தியா முழுக்கவே இருக்கிறது.

  bjp

  இந்நிலையில், டீக்கடையில் நடந்த வாக்குவாதத்தில் பாஜக கட்சியின் முன்னாள் நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருப்பது புதுச்சேரி முழுக்கவே பரபரப்பாக பேசப்பட்டது. புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் பாலாஜி. அந்த பகுதியின் பாஜக இளைஞரணி பொறுப்பாளராக இதற்கு முன்பு பதவி வகித்து வந்தார். புதுச்சேரியில் எலக்ட்ரிக்கல் வேலைகளைச் செய்து வந்த ஆனந்த் பாலாஜிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னார் தான் திருமணம் நடந்தது. 

  knife

  நேற்று மாலை ஆனந்த் பாலாஜி புதுச்சேரி விவேகானந்தா நகர் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே தேநீர் கடைக்கு வந்த 4 நபர்களுக்கும், ஆனந்த் பாலாஜிக்கும் இடையே பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பிலும் கொண்டு சென்றது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த கத்தியால் ஆனந்த் பாலாஜியை அதே இடத்தில் வைத்து சரமாரியாக வெட்டி விட்டு பைக்கில் தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த ஆனந்த் பாலாஜி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரியில் நேற்று முழுவதும் பட்டப்பகலில் டீக்கடையில் வெட்டிக் கொலைச் செய்யப்பட்டதைப் பற்றி பரபரப்பாக பேசினார்கள்.