வாட்ஸப்பில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல்! பயனாளர்கள் அவதி

  0
  2
  வாட்ஸ் அப்

  இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை என்ற நிலையில் உள்ளன் அந்த அளவுக்கு மிக முக்கியமான தொடர்பு கருவியாக வாட்ஸ் அப் செயலி இயங்குகிறது.

  இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை என்ற நிலையில் உள்ளன் அந்த அளவுக்கு மிக முக்கியமான தொடர்பு கருவியாக வாட்ஸ் அப் செயலி இயங்குகிறது. வீடியோ, புகைப்படங்கள் பகிர்தல், சேட்டிங், குரூப் சேட்டிங், குரூப் காலிங், வீடியோ மற்றும் ஆடியோ கால் போன்ற அனைத்து வசதிகளும் வாட்ஸ் அப்பில் உள்ளது. இளைஞர் மற்ற சமூக வலைதளத்தைவிட வாட்ஸ் அப்பில்தான் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர் என அண்மையில் பரவலாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் தன்வசம் வாங்கிய பிறகு வாட்ஸ் அப்பில் பல பல புதிய அப்டேட்ஸ்கள் வந்து பயனர்களை குஷிப்படுத்தி வருகிறது. 

  வாட்ஸ் அப்

  இந்நிலையில் இன்று மாலையிலிருந்து உலகின் பல்வேறு இடங்களில் வாட்ஸப்பில் வீடியோ, புகைப்படம் அனுப்ப முடியாததால் பயனர்கள் அவதிக்குளாகியுள்ளனர். சிக்கல் குறித்து வாட்ஸப் நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை; #Whatsappdown என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.