‘வாடகை பாம்பு’ சூலத்துடன் அம்மன் கெட்டப்பில் அருள்வாக்கு சொல்லும் பெண்: குறளிவித்தையை நம்பி பணத்தை கொட்டும் பக்தர்கள்!

  0
  4
   கபிலா

  கும்பாபிஷேகம் என அப்பகுதியில் செல்வாக்குமிக்க பெண்மணியாக வளர்ந்து நிற்கிறார். 

  காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்த கபிலா. இவர் எம்.ஏ பட்டதாரி என்று கூறப்படுகிறது. வடபத்ரகாளியம்மன் அருள்வாக்கு சொல்லுமிடம் என்று 1999 ஆம் ஆண்டு குடிசையில் துவங்கிய இவரது வாழ்க்கை  தற்போது பிரம்மாண்ட கட்டிடம், கோயிலுக்கு இரண்டு முறை கும்பாபிஷேகம் என அப்பகுதியில் செல்வாக்குமிக்க பெண்மணியாக வளர்ந்து நிற்கிறார். 

  ttn

  சமீபத்தில் இவரது கோயிலில்  நாகர் சிலைக்கு பூஜை செய்வதற்குப் பதிலாக  நிஜ நாகத்திற்குப்  பூஜை செய்யப்பட்டது. அதாவது பாம்பாட்டியின் துணையுடன் 10 ஆயிரம் ரூபாய்க்கு நாகங்கள் இரண்டு கொண்டு வரப்பட்டு அதன் மீது பாலை  ஊற்றி கோயில் முழுவதும் நடமாட விட்டு  கடைசியில் அதை தனது கழுத்தில் சுற்றிக்கொண்டு சூலத்துடன்  கபிலா அம்மையார் காட்சி கொடுத்தது அன்று நல்ல வசூல் வேட்டையை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.

  ttn

  5 ரூபாய் எலுமிச்சை உடலில் எந்த நோய் வந்ததாலும் குணமாக்கும்  சக்தி படைத்த இந்த பெண்மணி, தனக்கு அம்மன் அருள் இருப்பதால் தான் பாம்பு கடிக்கவில்லை என்று கூறி அதிர்ச்சி கொடுக்கிறார். 

  பாம்புகளை வைத்து வித்தை காட்டுவது, அதை துன்புறுத்துவது சட்டப்படி குற்றம் என்பது தெரியாமல் சாமி என்ற பெயரில் வேடிக்கை காட்டிவரும் இவர்களை போன்றவர்களைக் கைது செய்யவேண்டும் என்பதே  சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.