வாடகைக்கு இருக்கும் வீட்டை அபகரிக்க முயலும் திமுக நிர்வாகி! 

  0
  4
  ஜிசில்லா

  சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அடாவடி தனத்தில் ஈடுபட்டுவந்த திமுக நிர்வாகிகள்… அடாவடி தனத்தின் உச்சத்திற்கே சென்று வாடகைக்கு இருந்த வீட்டை சொந்த வீடாக்க முயற்சி செய்யும் அதிர்ச்சி சம்பவம்  திருப்பூரில் அரங்கேறியுள்ளது. 

  சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அடாவடி தனத்தில் ஈடுபட்டுவந்த திமுக நிர்வாகிகள்… அடாவடி தனத்தின் உச்சத்திற்கே சென்று வாடகைக்கு இருந்த வீட்டை சொந்த வீடாக்க முயற்சி செய்யும் அதிர்ச்சி சம்பவம்  திருப்பூரில் அரங்கேறியுள்ளது. 

  திருப்பூர் மாணவரணி அமைப்பாளர் கோபிநாத். இவர் திருப்பூர் சூசையாபுரம் முதலாவது தேருவிலுள்ள ஜிசில்லா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார். ஜிசில்லாவுக்கு சொந்தமாக, மூன்று தளங்கள் கொண்ட வீடு உள்ளது. ஜிசில்லா மருத்துவ செலவுக்காக, வீட்டு பத்திரத்தை வைத்து, தி.மு.க.,வை சேர்ந்த கோபிநாத் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார்.

  Gopi

   

  கோபிநாத்தும் அவருக்கு வங்கி கணக்கில் பணம் அனுப்பியுள்ளனர். அதன்பின் ஜிசில்லா சில நாட்களுக்கு பிறகு பணத்தை வட்டியுடன் திருப்பி செலுத்தியுள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட கோபிநாத், வீட்டு பத்திரத்தை திரும்ப கொடுத்துவிட்டதாகவும், கையொப்பமிட்ட நிரப்பப்படாத பாண்ட் பத்திரம் மற்றும் நிரப்பப்படாத கையெழுத்திட்ட செக் லீப் ஆகியற்றை திருப்பி கொடுக்காமல், மீண்டும் பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஜிசில்லா புகார் அளித்துள்ளார். மேலும் வீட்டை அபகரிக்கும் முயற்சியில் இதுபோன்று கோபிநாத் செய்வதாக குற்றஞ்சாட்டுகிறார். 

  இந்த பிரச்னையால் கோபிநாத்தை வீட்டை காலிசெய்யுமாறு சொல்லியும் இதுவரை காலிசெய்யவில்லை என்றும் போலீசில் புகார் அளித்துள்ளார்.