வாங்குன ஒரே மாதத்தில் வெடித்து சிதறி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்! 

  0
  15
  redmi note 7s

  மும்பையை சேர்ந்த ஈஷ்வர் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் வாங்கிய ஸ்மார்ட்போன் திடீரென வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  மும்பையை சேர்ந்த ஈஷ்வர் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் வாங்கிய ஸ்மார்ட்போன் திடீரென வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  ஈஷ்வர் கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் மூலமாக ஜியோமி ரெட்மி நோட் 7எஸ் என்ற ஸ்மார்ட்போனை வாங்கியுள்ளார். நவம்பர் 2 ஆம் தேதிவரை நன்றாக செயல்பட்ட அந்த போனை மேஜையில் வைத்து சார்ஜ் செய்துகொண்டிருக்கும்போது தீ பற்றிய வாடை வந்தது. உடனே ஈஷ்வர் வந்து பார்த்துள்ளார். அப்போது போன் தீப்பற்றி எரிந்தது. போனிலிருந்த சிம் கார்டையும் கழற்ற முடியவில்லை. 

  XIAOMI REDMI NOTE 7S

  இதுகுறித்து ஈஷ்வர் ஜியோமி நிறுவனத்திடம் புகார் அளித்தார். இதற்கு ஜியோமி நிறுவனம் போன் தயாரிப்பில் எந்த குறைபாடும் இல்லை வாடிக்கையாளர் ஏற்படுத்திய சேதமே போன் வெடித்ததற்கு காராணம் என பொறுப்பில்லாமல் பதில் கூறியது. மேலும் சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேச வேண்டாம் என்றும்,  தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துக்கொண்டு தூங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.