வாக்கு சாவடிக்குள் நுழைந்த விஷப் பாம்பு…வெலவெலத்து ஓடிய பொது மக்கள்: கேரளாவில் பரபரப்பு!

  0
  8
  பாம்பு

  கேரள மாநிலம் கண்ணூர் மக்களவைத் தொகுதியில் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  கேரளா: கண்ணூர் மக்களவைத் தொகுதியில் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  vote

  மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. 2-ம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் ஏப்ரல் 18-ம்  நடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று 3-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.அதன்படி  13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் காலை முதலே மக்கள் ஆர்வமாக தங்கள் வாக்கைப் பதிவு செய்து வருகின்றனர்.  

  pinarayi

  கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து வருகிறது. முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

  kerala

  இந்நிலையில் கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட மயில் கண்டகை நகரில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்கக் காத்திருந்தனர். அப்போது, வாக்குச்சாவடி மையத்திலிருந்த ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரம் ஆடியது. அதிலிருந்து சத்தம் வெளியாகியது. அதற்குள் பாம்பு இருப்பதைக் கண்ட வாக்களிக்க வந்த ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.

  snake

  பின்னர் அவர் பாம்பு…பாம்பு என்று சத்தம் போடவே வாக்களிக்க வந்தவர்களும், அறையிலிருந்த தேர்தல் அதிகாரிகளும் அலறியடித்து ஓடினர்.  சத்தம் போடவே வாக்களிக்க வரிசையிலிருந்த மக்களும், தேர்தல்  அலறியடித்து வெளியே ஓடினர். இதையடுத்து அதிகாரிகள் சிலரும், போலீசாரும் வந்து ஒப்புகைச் சீட்டு எந்திரத்திலிருந்த பாம்பை எடுத்தனர். இதைத் தொடர்ந்து பாம்பானது காட்டு பகுதிக்குள் விடப்பட்டது. இதனால் சில மணி நேரம் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 

  இதை வாசிக்க: தாயின் ஆசியுடன் ஜனநாயக கடமையை ஆற்றிய மோடி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!