வாக்கு எந்திரத்தை அடுத்து ஏடிஎம் இயந்திரத்துக்குள்ளும் பாம்பு…அடுத்தது எங்க…!

  0
  2
  பாம்பு

  மக்கள்  நடமாட்டம் உள்ள ஏ.டி.எம். ஒன்றில்  பாம்பு ஒன்று இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கோவை : மக்கள்  நடமாட்டம் உள்ள ஏ.டி.எம். ஒன்றில்  பாம்பு ஒன்று இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  atm

  கோவை தண்ணீர் பந்தல் சாலையில் ஐ.டி.பி.ஐ.வங்கியின் ஏ.டி.எம் ஒன்று அமைந்துள்ளது. பிரதான சாலையில் இந்த ஏ.டி.எம்  அமைந்துள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க  ஏ.டி.எமிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சுமார் 4 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று படுத்திருந்துள்ளது. இதை கண்ட அந்த வாடிக்கையாளர் அலறி அடித்து ஓடியுள்ளார். 

  atm

  இதையடுத்து இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்க,  ஏ.டி.எமிற்கு விரைந்து வந்த ஒருவர் பாம்பை பிடிக்க முயன்றார். அப்போது, பாம்பு அவரை நோக்கி சீறியது. இருப்பினும் சாதுர்யமாக பாம்பைப் பிடித்த அவர் அதை காட்டுப்பகுதியில் விட்டு சென்றார். கடும் வெயில் காரணமாகப் பாம்பு ஏ.டி.எம் அறைக்குள் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

  snake

  முன்னதாக கேரள மாநிலத்தின்  கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றிலிருந்த ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரத்தில் பாம்பு ஒன்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்டது குறிப்பிடத்தக்கது. 

  இதையும் வாசிக்க: வாக்கு சாவடிக்குள் நுழைந்த விஷப் பாம்பு…வெலவெலத்து ஓடிய பொது மக்கள்: கேரளாவில் பரபரப்பு!