வாகன ஓட்டிகளுக்கே தெரியாமல் போலீசார் வழக்குப்பதிவு.. உஷார் மக்களே!

  0
  1
  வழக்குப்பதிவு

  மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கை மீறி வெளியே செல்லும் நபர்களிடம், போலீசார் அவர்களுக்கே தெரியாமல் வழக்குப்பதிவு செய்வதாகவும் இன்று வரை 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

  ttn

  இது குறித்து பேசிய வாகன ஓட்டி ஒருவர், மக்களின் வாழ்வாதாரத்தை பற்றிக் கவலைக் கொள்ளாத அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் கூட்டக்கூடாது என்பதற்காக போடப்படுகிறது. அதன் படி, தனி நபர் வெளியே செல்லலாம். ஆனால், தற்போது பைக்கில் சென்றால் கூட நமக்கே தெரியாமல் வழக்குப்பதிவு செய்கின்றனர். அதுமட்டுமில்லாமல் வாகனங்களை  பறித்துக் கொண்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்கின்றனர் என்று தெரிவித்திருக்கிறார். 

  வாகன ஓட்டிகளுக்கே தெரியாமல், திருவள்ளூர் காவல்துறையினர் வாகன எண்ணைக் குறித்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்து, அந்த நபருக்கு இணையத்தளம் மூலமாக மெசேஜ் அனுப்பி வருகின்றனர்.