வலுவான நிலையில் ஆஸ்திரேலியா: முன்னிலை பெற தவறியதால் நெருக்கடிக்கு உள்ளாகிய இந்திய அணி

  0
  1
  ind vs aus

  இந்தியா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது .சமனில் முடிந்த 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை அடுத்து தொடங்கிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  -குமரன் குமணன்

  பெர்த்: இந்தியா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது .சமனில் முடிந்த 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை அடுத்து தொடங்கிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  பெர்த் நகரில் நடந்து வரும் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது.

  மூன்றாம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு , நாளின் நான்காவது பந்திலேயே லியோன் அதிர்ச்சி அளித்தார். ரஹானே தனது நேற்றைய ஸ்கோரான 51 ரன்களிலேயே லியோன் பந்துவீச்சி்ல் பெய்னிடம் கேட்ச் ஆனார். அப்போதைய ஸ்கோர் 173/4. அடுத்து விஹாரி களமிறங்க ..சற்று நேரத்தில் மறுமுனையில் இருந்த கோலி எதிர்பார்த்தபடியே தனது 25ஆம் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

  46 பந்துகளில் 20 ரன்களோடு பெவிலியன் திரும்பினார் விஹாரி .ஹேசில்வுட் பந்துவீச்சில் பெய்ன் மீண்டும் ஓரு கேட்சை பிடித்தார். அப்போதைய ஸ்கோர் 233/5.

  கோலி அபாரமாக ஆடி 123 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தான் எதிர்கொண்ட 257ஆம் பந்தை டிரைவ் செய்ய ,ஸ்லிப்பில் நின்ற ஹேன்ட்ஸகோம்ப் பந்தை பிடித்து விட்டதாக கருதினார் .3ஆம் நடுவரிடம் நிகழ்வு சென்றபோது ,கள நடுவரான குமார தர்மசேன தனது கருத்தை soft signal முறைப்படி அவுட் என்று தெரியப்படுத்தினார் .இதனை மூன்றாவது நடுவரான நைஜல் லோங் ஏற்க , உண்மையில் அது அவுட் இல்லை என தெரிந்த பின்னும் வேறு வழி ஏதுமின்றி வெளியேறிய கோலி .13 பவுண்டரிகள் மற்றும் ஓரு சிக்ஸரை அடித்திருந்தார். அப்போதைய ஸ்கோர் 251-6.

  அதற்கடுத்த ஓவரிலேயே பெய்ன் -லியோன் கூட்டணிக்கு முதல் பந்திலேயே இரை ஆனார் ஷமி. இரண்டு ஓவர்களுக்கு பின் 11 பந்துகளில் ஓரு ரன் எடுத்திருந்த இஷாந்த் ஷர்மா லியோன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்தார்.

  ஓரு முனையில் உமேஷ் யாதவ் இருக்கமறு முனையில் பெரும்பாலான ரன்களை சேகரித்த ரிஷப் பண்ட் 50 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த பும்ரா ஓரு பவுண்டரி மட்டும் அடித்து , தான் எதிர்கொண்ட நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார் இந்த இரு விக்கெட்டுகளை லியோன் வீழ்த்தினார்.

  மொத்தமாக இந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் அவர். இந்தியா 105.5 ஓவர்களில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  முன்னிலையாக 43 ரன்களை பெற்ற ஆஸ்திரேலிய அணி ,இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்கம் முதலே இந்திய வேகப்பந்து வீச்சு அபாரமாக இருந்தபோதிலும் ,விக்கெட்டுகள் விழும் தருணம் கைவரவில்லை .முதல் விக்கெட்டுக்கே 59 ரன்கள் சேர்ந்த பின்னர் தான் ஹாரிஸ் பும்ரா பந்துவீச்சில் 20(59) ரன்களில் அட்டமிழந்தார்.மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஃபிஞ்ச் 5 பவுண்டரிகளுடன் 30 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த போது வலது கை ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயம்அவரை வெளியேற்றியது.

  தேநீர் இடைவேளைக்கு பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் அனல் பறந்தது .காற்றின் வீச்சும் ,எந்த நேரத்திலும் எதுவும் நிகழும் என்ற நிலையும் ஆட்டத்தை சுவாரஸ்யமாக்கின.

  ஓரு புறம் ஷான் மார்ஷ் 5(11) ஹான்ட்ஸ்கோம்ப் 13(14 ) 3×4 என விக்கெட்டுகள் விழுந்தாலும் மாறுபக்கம் க்வாஜா நிலைத்து நின்றார் .டிரேவிஸ் ஹெட் 19(49) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .இவர்களில் மார்ஷ் மற்றும் ஹெட் ஆகியோர் விக்கெட்டுகளை ஷமி கைப்பற்ற ,இடையில் ஹேன்ட்ஸ்கோம்பை வீழ்த்தியிருந்தார் இஷாந்த் ஷர்மா.

  மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் அதன் 2ஆம் இன்னிங்ஸ் முன்னிலை 175 ரன்களை எட்டியுள்ளது.

  நாளை காலை இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே இந்தியாவுக்கான வெற்றி இலக்கை குறைக்க முடியும். மேலதிக ரன்களை ஆஸ்திரேலியா திரட்டினால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகும்.

  இந்திய அணி தொடரில் பெற்றுவிட்ட முன்னிலையை தக்கவைக்க ,இந்த டெஸ்டில் டிரா செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது .கடந்த காலங்களில் சில போட்டிகளில் இலக்குகளை துரத்தி நெருங்கி தோற்ற வரலாறும் உண்டு. நாளை காலை 7.50 மணிக்கு நான்காம் நாள் ஆட்டம் தொடங்கும்.