வலிமை படத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கும் ஸ்ரீதேவி மகள்!

  0
  4
  ஜான்வி கபூர்

  அஜித் நடிக்கும் வலிமை படத்தில் நயன் தாரா நடிக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில் அவருடன் இணைந்து நடிகை ஜான்வி கபூருடன் நடிக்கவுள்ளார். 

  அஜித் நடிக்கும் வலிமை படத்தில் நயன் தாரா நடிக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில் அவருடன் இணைந்து நடிகை ஜான்வி கபூருடன் நடிக்கவுள்ளார். 

  நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் அஜித் நடிக்கவுள்ளார். அஜித்தின் 60வது படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு ‘வலிமை’ என தலைப்பிடப்பட்டு பூஜையும் வெற்றிகரமாக நேற்று முடிவடைந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் முதல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  valimai

  இந்த படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. மேலும் இந்த படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்றும், அவருடன் இணைந்து அனிகா, நயன் தாரா ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் நயன் தாராவுடன் இணைந்து ஸ்ரீ தேவி- போனிகபூரின் மகள் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.