‘வலிமை’யில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை இவர் தானாம்!?

  0
  2
  வலிமை

  கார் சேசிங் காட்சிகளை  அமைத்து கொடுத்த  ஹாலிவுட் கலைஞர் ஹென் கோலின்ஸ்  என்பவரைப் படக்குழு  அணுகியுள்ளதாம். 

  நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கிறார். இதற்காக அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து புது கெட்டப்பில் மாறியுள்ளார். தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது.

  ttn

  இந்த படத்தில்  அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.போலீஸ் அதிகாரி கேரக்டர் என்பதால்  கார் சேசிங் காட்சிகள்  படத்தில் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு கார் சேசிங் காட்சிகளை  அமைத்து கொடுத்த  ஹாலிவுட் கலைஞர் ஹென் கோலின்ஸ்  என்பவரைப் படக்குழு  அணுகியுள்ளதாம். 

  ttn

  இந்நிலையில் வலிமை  படத்தின் படப்பிடிப்பு நேற்றுமுதல் தொடங்கியது. இதில் அஜித்துக்கு  ஜோடியாக யார் நடிக்க போகிறார்கள் என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை இலியானா நடிக்க இருப்பதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. 

  ttn

  தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த இலியானா பாலிவுட் பக்கம் சென்றார். சமீபத்தில் காதலருடன் ஏற்பட்ட பிரிவு என தனிமையில் வாடும் இலியானாவுக்கு வலிமை திரைப்படம் மீண்டும் ஒரு கம் பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.