வறட்சியினால் 200 யானைகள் பலி – ஸ்தம்பிக்கும் ஜிம்பாப்வே

  0
  8
   யானைகள் பலி

  ஜிம்பாப்வேயில் நிலவிவரும் கடும் வறட்சியால் 200க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளதாக உயிரியல் பூங்கா அறிக்கை வெளியிட்டு உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  ஜிம்பாப்வே நாட்டில் தற்போது வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. அக்டோபர் மாதத்தில் பெய்யும் வருடாந்திர மழை பொய்த்து விட்டதால் நீர்நிலைகள் வற்றி அன்றாட தேவைக்கான தண்ணீர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுப் பகுதியில் இருக்கும் நீர்நிலைகளும் ஏற்கனவே வற்றிவிட்டன.  தேக்கத்தில் இருந்த நீரும் தீர்ந்து விட்டதால், விலங்குகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

  elephants

  காட்டில் இருக்கும் மான்கள், காட்டெருமைகள், ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் பறவைகளும் இந்த வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. காடுகளுக்கு வந்துசெல்லும் பறவைகளின் வரவும் இந்த ஆண்டு மிகவும் குறைந்திருக்கிறது.

  இந்த கடும் வறட்சியால் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் சுமார் 200க்கும் மேற்பட்ட யானைகள் தற்போது வரை உயிரிழந்து இருக்கின்றன.

  இதனால் விரைவில் 50க்கும் மேற்பட்ட காட்டெருமைகள், சிங்கங்கள், ஒட்டகச் சிவிங்கிகள், காட்டு நாய்கள், மீதமுள்ள இரண்டாயிரம் யானைகள் என அனைத்தையும் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற உயிரியல் பூங்கா நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இந்த இடம் பெயர்தல் நிகழ்விற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்கு அரசு தரப்பு உதவி செய்தால் மட்டுமே சாத்தியமாகும். இல்லையேல் அடுத்த ஒரு வாரத்திற்குள் மேலும் 100 யானைகள் மற்றும் இதர விலங்குகள் உயிரிழக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. 

  elephant

  இந்த வறட்சி நிலையை சமாளிக்க தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் மழை பெய்தால் மட்டுமே இயல்பு நிலைக்கு திரும்ப இயலும் எனவும் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. 

  தற்போதுவரை 200 யானைகள் உயிரிழந்திருப்பதாக வெளியிட்ட அறிக்கையை கேட்டு சமூக மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

  பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யா போன்ற பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகள் உதவிக்கரம் நீட்டினால் மீதமுள்ள விலங்குகளை காப்பாற்ற இயலும் என உயிரியல் பூங்கா நிர்வாகி ஒருவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.