வருஷத்துக்கு ஒருநாள் நடைபெறும் விநோத சடங்கு! விஷத்தை முறிக்கும் என்ற நம்பிக்கையில் பாம்பு கடி வாங்கும் மக்கள்

  0
  4
  பழங்குடி நபர்

  நாகங்களின் கடவுளாக கருதும் மனாசா தேவியை சாந்தி படுத்துவற்காக ஜார்க்கண்ட் பழங்குடி மக்கள் ஆண்டுதோறும் ஒருநாள் விநோதமான சடங்கை மேற்கொள்கின்றனர். அதில் பாம்பாட்டிகளை பாம்புகள் கடிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

  ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரிலிருந்து 50 தொலைவில் உள்ளது ஷங்கர்தா கிராமம். இந்த கிராமத்தில் பழங்குடி மக்கள் வசதித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் விஷபாம்புகளை பிடித்தும், அதை வைத்து நிகழ்ச்சி நடத்தியும் வயிற்று பொழைப்பை நடத்தி வருகின்றனர். இந்த பாம்பாட்டி மக்கள் நாகங்களின் கடவுளாக கருதும் மனசா தேவியை சாந்தப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஒரு விநோதமான பூஜை சடங்கை நடத்துகின்றனர்.

  பாம்பாட்டி

  இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த கருணமே மண்டல் கூறுகையில், நாகங்களின் கடவுளான மனாசா தேவியை ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் வழிபடுகிறோம். 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சடங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண் கடவுளை சாந்தப்படுத்துவற்காக பாம்பாட்டிகள் ரதத்தில் அமருகின்றனர். பின் பூஜைகள் நடைபெறுகிறது. அப்போதுதான் பாம்புகள் அவர்களை கடிக்கும்  என தெரிவித்தார்.

  பாம்பாட்டி

  பாம்பின் விஷம் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அல்லது வலிமை கொடுக்கும் என்ற நம்பிக்கை காரணமாக பாம்பாட்டிகள் பாம்பிடம் கடி வாங்குகின்றனர். பூஜை நேரத்தில் ரதத்தில் பாம்பாட்டிகள் இருந்தால் பாம்பின் விஷத்தால் அவர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது என அந்த பகுதி மக்கள் நம்புகின்றனர்.