வருவாய் ரூ.263 கோடிதான்….. ஆனால் நஷ்டம் ரூ.10,598 கோடியாம்…. அனில் அம்பானி நிறுவனத்தின் பரிதாப நிலை….

  0
  5
  அனில் அம்பானி

  ஆர்காம் (ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்) நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நஷ்டமாக ரூ.10,598 கோடி சந்தித்துள்ளது.

  ஒரு காலத்தில் இந்தியாவின் மெகா கோடீஸ்வராக விளங்கிய அனில் அம்பானியின் தற்போதைய நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. வர்த்தகத்தில் நிகழ்ந்த தொடர் சரிவுகளால் வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் அனில் அம்பானியின் நிறுவனம் திவால் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

  அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இந்த நிதியாண்டின் 3வது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ஒட்டு மொத்த அளவில் ரூ.10,598 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகும். அந்த காலாண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.238 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

  முகேஷ் அம்பானியுடன் அனில் அம்பானி

  கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.263 கோடியாக குறைந்துள்ளது. 2018 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1,083 கோடியாக இருந்தது.