வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்து போச்சே…. எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ்

  0
  8
  எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ்

  எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.602.25 கோடி ஈட்டியுள்ளது. இது 2018 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் குறைவாகும்.

  நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி.யின் நிதி நிறுவனமான எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2019அக்டோபர்-டிசம்பர்) ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.602.25 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் குறைவாகும். 2018 டிசம்பர் காலாண்டில் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.607.29 கோடி ஈட்டியிருந்தது.

  எல்.ஐ.சி.

  கடந்த டிசம்பர் காலாண்டில் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.5,006.12 கோடியாக உயர்ந்துள்ளது. 2018 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.4,465.76 கோடியாக இருந்தது. 2019 டிசம்பர் காலாண்டில் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளபோதிலும் லாபம் சரிவடைந்துள்ளது.

  வருவாய்

  கடந்த சனிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவன பங்கின் விலை 7.94 சதவீதம் அல்லது ரூ.34.75 குறைந்து ரூ.402.75ஆக சரிந்தது.