வரும் 25 ஆம் தேதி வரை திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக பார்க்கலாம்! 

  0
  4
  thirumalai nayakar mahal

  தொல்பொருள் பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு வரும் 25ம் தேதி வரை மதுரை திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக பார்வையிடலாம் என மண்டல உதவி இயக்குநர் அறிவித்துள்ளார். 

  தூங்கா நகரம் என அழைக்கப்படும் மதுரை 2500 ஆண்டுகளுக்கு முன்பே உருவானது. சங்கம் வைத்து தமிழ் வளர்ந்த மதுரையில்  சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராஜ்ஜியம், ஆங்கிலேயர்கள் ஆகியோர் ஆண்டுள்ளனர். அந்த வகையில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் கி பி 1636ம் ஆண்டு திருமலை நாயக்கர் மஹாலை கட்டினார். இந்தோ சரசனிக் கட்டிடக் கலை வடிவமைப்பில் இத்தாலிய கட்டிடக் கலைஞர் ஒருவரால் இது கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் 248 பிரம்மாண்ட கோபுரங்களைக் கொண்டு கம்பீரமாக நிற்கிறது. கூரையில் விஷ்ணு, சிவன் பற்றிய புராண கதைகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.

  thirumalai nayakar mahal

  இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மதுரை திருமலை நாயக்கர் மஹாலை வரும் 25 ஆம் தேதிவரை இலவசமாக  சென்று பார்க்கலாம் என்றும், தொல்பொருள் பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் மண்டல உதவி இயக்குநர் அறிவித்துள்ளார்.