வரும் 25ம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்! மின்சார வாகனங்களுக்கான வரி குறைய வாய்ப்பு…..

  0
  1
  நிர்மலா சீதாராமன்

  நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமல் படுத்தும் நோக்கிலும், அனைத்து வகையான மறைமுக வரிகளுக்கு மாற்றாகவும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியை (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு 2017 ஜூலையில் அறிமுகம் செய்தது. தற்போது அரசுக்கு ஜி.எஸ்.டி. வாயிலாக சராசரியாக மாதத்துக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது.

  gst

  மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கூட்டம் மாதந்தோறும் நடைபெறுகிறது. அந்த வகையில் வரும் 25ம் தேதியன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் மின்சார வாகனங்களுக்கான வரி மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்ட உள்ளது.

  electric cars

  அந்த கூட்டத்தில் மின்சார வாகனங்களுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், சார்ஜர்களுக்கான வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், ஹியரிங்களுக்கான வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  nirmala sitharaman

  இதுதவிர சூரிய சக்தி மின்உற்பத்தி அமைப்புகள் மற்றும் காற்றாலை டர்பன்பைன்ஸ் தொடர்பான விவகாரங்களும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ள இந்த வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடக்கும் என தெரிகிறது.