வரும் மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியாவையும், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷனையும் வித்து காசு பார்த்து விடுவோம்- நிர்மலா சீதாராமன்

  0
  6
  நிர்மலா சீதாராமன்

  இந்த நிதியாண்டுக்குள் (2020 மார்ச்) பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியாவையும், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷனையும் விற்பனை செய்து விடுவோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

  மத்திய நிதியமைச்சர் நிர்மலா முன்னணி செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதலீ்ட்டாளர்கள மத்தியில் நிறைய ஆர்வம் காணப்படுகிறது. ஏர் இந்தியா விற்பனையை முன்னிட்டு வெளிநாடுகளில் நடத்திய ஷோக்களில் அது தெளிவாக தெரிந்தது. அதனால் மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியா மற்றும்  பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்து விடுவோம்.

  ஏர் இந்தியா

  சில பிரிவுகளில் விற்பனையில் முன்னேற்றம் மற்றும் ஜி.எஸ்.டி.யில் உள்ள சில குறைபாடுகளை சரி செய்ய மேற்கொண்ட முயற்சிகளாலும் வரும் நாட்களில் ஜி.எஸ்.டி. வசூலில் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கிறேன். பண்டிகை காலத்தில் நடத்திய உடனடி கடன் வழங்கும் திட்டத்தின்கீழ், வங்கிகள் ரூ.1.8 லட்சம் கோடி கடன் வழங்கி உள்ளன.

  ஜி.எஸ்.டி.

  பொருளாதார மந்தநிலையை வளர்ச்சி பாதைக்கு திருப்புவதற்கும், சில துறைகளை நெருக்கடியிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கும் சரியான நேரத்தில் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் திரட்ட வேண்டும் என மத்திய அரசின் திட்டத்தில், ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் விற்பனை முக்கிய பங்கினை கொண்டுள்ளன.