வரும் திங்கட்கிழமை விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! பிகிலின் புது அப்டேட்!!

  0
  3
  bigil

  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிகில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.

  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிகில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.

  நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

  bigil

  இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவும் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் அமைந்தது. இந்நிலையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிகில் படத்தில் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும் திங்கட்கிழமை படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மேலும் படம் தீபாவளி அன்றே அதாவது அக்டோபர் 27 ஆம் தேதியன்றே வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.