வரும் திங்கட்கிழமை முதல் 24 மணி நேரமும் நெஃப்ட் சேவை- ரிசர்வ் வங்கி தகவல்…

  11
  நெஃப்ட் சேவை

  வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 16) முதல் வங்கியின் நெஃப்ட் சேவை 24 மணி நேரமும் செயல்படும் என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

  வங்கியின் இணையவழி பணப்பரிமாற்ற சேவைதான் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (நெஃப்ட்). ரூ.2 லட்சம் வரையிலான பணப் பரிமாற்றததுக்கு வாடிக்கையாளர்கள் நெஃப்ட் சேவையைதான்  பயன்படுத்திகின்றனர். ஆன்லைன் சேவையாக இருந்தாலும் வாடிக்கையாளர்களால் நினைத்த நேரத்தில் நெஃப்ட் சேவையை பயன்படுத்த முடியாது.

  பணப்பரிமாற்றம்

  வாடிக்கையாளர்கள் தற்சமயம் நெஃப்ட் சேவையை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் சனிக்கிழமைகளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருந்து வருகிறது. இதுதவிர, வார விடுமுறை நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் நெஃப்ட் சேவையை பயன்படுத்த முடியாது. 

  இந்திய ரிசர்வ் வங்கி

  நாட்டின் பேமெண்ட் அமைப்பில் புரட்சியை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 16ம் தேதி முதல் நெஃப்ட் சேவையை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும்  பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்கிறது. 24 மணி நேரமும் நெஃப்ட் சேவை அறிமுகம் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் பரவலாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.