வரி ஏய்ப்பில் ஈடுபட்ட கூகுள் நிறுவனம்! அபராதத்துடன்  7ஆயிரத்து 592 கோடி ரூபாய் கட்டிய பரிதாபம்! 

    17
    google involved in tax evasion

    உலகம் முழுவதும் கூகுள் நிறுவனம் தனது கிளைகளை நிறுவி இயங்கி வருகிறது. இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் பிரான்ஸ் நாட்டிற்கான கிளை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் இயங்கி வருகிறது. கூகுள் நிறுவனம் 2016ஆம் ஆண்டு சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய்களை வரையில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய பிரான்ஸ் நாட்டு அரசு, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கூகுள் நிறுவனம் தொடர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்ததை கண்டுபிடித்தது. 

    google fined

    இந்நிலையில், வரி ஏய்ப்பு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர, கூகுள் நிறுவனம் பிரான்ஸ் அரசுடன் சமரசம் செய்து கொண்டது. வரி ஏய்ப்பு செய்ததற்கான அபராத தொகையான 3 ஆயிரத்து 933 கோடி ரூபாயையும், வரி பாக்கி தொகையான 3 ஆயிரத்து 659 கோடி ரூபாயும் வழங்க கூகுள் நிறுவனம் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது.